ஆற்றல் மிகு சிறுவர் சமுதாயத்திற்கு ஆரோக்கியமான உணவு

            இன்றைய  நூற்றாண்டிலே சிறுவர்களின் ஆளுமையானது பல்வேறு துறைகளிலும்  அசூர வேகத்தில் முன்னேறிக்கொண்டே செல்கிறது. “ சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்” என்ற முதுமொழிக்கிணங்க சிறுவர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் ஆற்றல்களை உரிய முறையில் வெளிகாட்ட முடியும். நிறைவான ஆரோக்கியமானது உடல், உள, சமூக நலனில் தங்கியுள்ளது. இதில் பிரதானமானது உடலாகும். உடலானது சிறந்த ஆரோக்கியமான உணவின் மூலமே சீராக பேணப்படுகிறது. எனவே சிறுவர் சமுதாயம் தங்களது சிறந்த  ஆற்றல்களை வெளிகாட்ட ஆரோக்கியமான உணவு இன்றியமையாததாகும்.

Nutrition-For-Kids

சிறுவர் பருவமானது மனித வாழ்க்கை வட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றகும். அதிகளவு வளர்ச்சி நடைபெறும் பருவமாகும். எனவே சக்தி, போசாக்கு தேவை அதிகமாகும். ஆனால் இப்பருவத்தில் அதிக சிறுவர்களுக்கு உணவில் ஆர்வம் குறைந்து விளையாட்டிலே அதிக ஆர்வம் காணப்டுகின்றது. அத்துடன் பதப்படுத்திய இரசாயனங்கள் சேர்கப்பட்ட உணவுகள் பற்றிய பல விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் கண்பிக்கப்படுகிறன. இவிளம்பரங்கள் பொதுவாக சிறுவர் நிகழ்சிகளுக்கு பிடித்த கார்ட்டூன் உருவங்களை பயன்படுத்தி சிறுவர்களை கவரும் வகையில் காண்பிக்கப்படுகின்றன. “அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை” என்பது போல  சிறுவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை விட அதிகளவு சீனி, கொழுப்பு கொண்ட உணவுகளிலே ஆர்வம் கூடுகிறது. எனவே ஆரோக்கியமான    உணவை உரிய அளவில் அளிப்பதில் தாய் முக்கிய இடம் வகிக்கிறாள். எனவே சிறுவர்களுக்கு பிடித்த வகையில் அவர்களை தூண்டும் வகையில் சமைத்து கொடுக்க வேண்டும்.

இன்றைய காலகட்டத்திலே பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்றவாறு தாய் தந்தை இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை காணப்டுகிறது. எனவே நேரப்பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான வேளைகளில் சமைப்பதை விட வெளியிடங்களில்  இருந்து உணவை பெற்று அன்றாட தேவையை நிறைவேற்றுகிறாள். பெற்றோர்கள் தங்களது சிறார்களில் அதிகளவு ஆர்வம் கொண்டிருந்தாலும் அவர்களது உணவுப் பழக்கவழக்கங்களில் அக்கறை கட்டுவதற்கான நேரம் குறைந்துகொண்டே செல்கின்றது. ஆனால் உணவானது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகும்.

அவ்உணவானது ஆரோக்கியமாக எடுக்கப்பட வேண்டும். “ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பதற்கு இணங்க உணவானது பல நோய்களில் இருந்து பாதுகாப்பு வழங்குகின்றது.

ஆரோக்கியமான உணவு என்று கூறும் போது “நிறையுணவு” முக்கியத்துவம் பெறுகிறது. நிறையுணவு என்பது அனைத்து உணவுகூறுகளும் அதன் விகிதாசாரத்திற்கேற்ப உள்ளடக்கப்பட்டிருக்க  வேண்டும். உணவில் அதிகளவு தானியங்கள் அடுத்தபடியாக மரக்கறிகள் உள்ளடகப்பட வேண்டும். இருப்பினும் சிறுவர்கள் அதிகளவு மரக்கறிகளை  விரும்புவதில்லை. எனவே அவர்கள் விரும்பக்கூடிய வகையில் ஆர்வத்தை தூண்டக்கூடிய வகையில் சமைத்து கொடுக்க வேண்டும். இதற்காக தாய்மார்கள்  அல்லது பெற்றோர்கள் பல முறைகளை கையாள முடியும்.

பல நிறங்களைக்கொண்ட மரக்கறிகளை ஒன்றாக இணைத்து சமைத்து கொடுத்தல் (Rainbow vegetable களை பயன்படுத்தல்).

பல மரக்கறிகள் பல நிறங்களில் காணப்டுகின்றன. இவை பல வகையான விற்றமின்கள், மூலக்கூறுகளை கொண்டுள்ளன. சிறுவர்களுக்கு ஒரு மரக்கறி சமைத்து கொடுப்பது அதிகளவு ஆர்வத்தை தூண்டாது. பல்வேறு நிறங்களை கொண்ட மரக்கறிகளை ஒன்றாக சேர்த்து சமைத்து கொடுக்கும் போது பார்வைப் புலத்தினூடக அவர்களது ஆர்வம் தூண்டப்படுகிறது. அத்துடன் சில ஆரோக்கியமான வாசணைத்திரவியங்களையும் இணைக்கலாம். இம்முறையானது சிறுவர்களின் ஆர்வத்தை தூண்டும். எனவே அதிகளவு மரக்கறிகளை விரும்பி உண்பார்கள். உதாரணமாக ஒரு செய்முறை:

பல்வேறு மரக்கறிகளை அவித்து தாழித்து கொடுத்தல்

தேவையானவை : கரட்-2, பூசணிகாய் – தேவையான அளவு, போஞ்சி- 100 g, பூக்கோவா- 100g, குடைமிளகாய் (சிவப்பு)- 1, வெங்காயம்- 1, பூண்டு- 4, ஒலிவ் அல்லது நல்லெண்ணெய்- 2 மேசைக்கரண்டி, கறிவேப்பிலை- தேவையான அளவு

செய்முறை: எல்லாவற்றையும் தூப்பரவு செய்து நன்றாக கழுவ வேண்டும். பின் கரட், பூசணிகாய் , போஞ்சி, பூக்கோவா என்பவற்றை சிறுதுண்டுகளாக ஒரு பாத்திரத்தினுள் இடவேண்டும். அத்துடன் சிவப்பு குடைமிளகாயின்

விதைகளை நீக்கிவிட்டு அதன் சதைப்பகுதிகளை துண்டுகளாக வெட்டி மரக்கறிகள் கொண்ட பாத்திரத்தினுள் இட்டு சிறிதளவு ஒலிவ் அல்லது நல்லெண்ணெய் இட்டு சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடாகும் நிலையில் வெட்டி வைக்கப்பட்ட வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை என்பவற்றை இட்டு 5 நிமிடங்கள் தாழித்து எடுக்க வேண்டும். ஆரோக்கியமான மரக்கறிகள் கொண்ட உணவு தயார்! இதை தனியாகவோ அல்லது சோற்றுடனோ சாப்பிடமுடியும்.ஒலிவ் அல்லது நல்லெண்ணெய் உடலுக்கு ஆரோகியமனதாகும். இவ் உணவானது போசாக்கு நிறைந்ததுடன் சிறுவர்களின் ஆர்வத்தை தூண்டக்கூடியது.

இங்கு சிறிதளவு நீரில் அவிப்பதால் அதிகளவு விற்றமின்கள் இழக்கபடுவது தடுக்கப்படுகிறது.

சந்தைக்கு செல்லும் போது பெற்றோர்கள் சிறுவர்களையும் தங்களுடன் கூட்டி செல்லுதல்

சிறுவர்களுக்கு சிலவேளைகளில் வீட்டில் இருக்கும் ஒருசில மரக்கறிகள் பிடிக்காமல் இருக்கலாம். எனவே சந்தைக்கு செல்லும்போது தங்களது சிறுவர்களையும் கூட்டிச்சென்றால் அவர்களது அங்குள்ள பலவகையான மரக்கறிகள் பழங்கள் மீன்வகைகள் போன்றவற்றை நேரடியாக பார்வையிடுவார்கள். தங்களுக்கு பிடித்த மரக்கறிகளை தெரிவு செய்வார்கள். அவர்களுக்கு மரக்கறிகள், பழங்கள் என்பவற்றில் அதிக ஆர்வம் ஏற்படும்.

P1130987

சமையல் வேலைகளில் சிறார்களையும் இணைத்தல்.

தாய் சமைக்கும் போது சிறார்களையும் சமையல் வேலைகளில் இணைத்து அவர்களுக்கு அதிகளவு மரக்கறிகள் பழவகைகளில் ஆர்வத்தை ஏற்படுத்தி சிறார்களை தங்களுக்கு விருப்பமான மரக்கறிகளை தெரிவுசெய்யவும் தூண்டவேண்டும். சிறுவர்கள் சமையலில் ஈடுபடுவதால் தாங்கள் இணைந்து சமைத்த உணவுகளை உண்ண வேண்டும் எனும் ஆர்வம் ஏற்ப்படும். இவ் ஆர்வத்தை தாய்மார்களுக்கு அதிகரிக்க வேண்டும்.

பெற்றோர்கள் சிறுவர்களுடன் இணைந்து வீட்டுத்தோட்டம் செய்தல்.

பெற்றோர்கள் சிறுவர்களுடன் இணைந்து வீட்டுத்தோட்டம் செய்வதுடன் விரும்பிய பல்வேறு மரக்கன்றுகளை நடமுடியும். இணைந்து வீட்டுத்தோட்டம் செய்தலானது இயற்கையான மரக்கறிகளை தருவதுடன் மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தரும். சிறுவர்கள் உற்சாகமாக தொழிற்படுவார்கள்.

பெரும்பாலும் பதப்படுத்தபட்ட உணவுகளை (processed foods) தவிர்த்து சுகாதாரமான போசாக்கு நிறைந்த உணவுகளை வீட்டில் சமைத்து சிறுவர்களுக்கு கொடுத்தல்.

தற்போதைய காலகட்டத்திலே உணவுச்சந்தையில் அதிகளவு பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகளவு சீனி, உப்பு சேர்க்கப்பட்ட உணவுகள் என்பனவே பெரும்பாலும் காணப்படுகிறது. இவ் உணவுகளில் பல இரசாயனப்பதார்த்தங்கள் காணப்படுகின்றன. இவை சிறுவர்களுக்கு ஒவ்வாமை (Allergy)  தாக்கங்களை ஏற்ப்படுத்தும். அத்துடன் சிறுவயதிலே உடல்நிறை அதிகரித்து பல தொற்றாத நோய்கள் ( இருதய நோய்கள், நீரிழிவு, கேன்சர் ) ஏற்படுவதற்கு வழிகோலும். எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகளவு உண்பதை தவிர்த்து இயற்கையான மரக்கறிகள், இறைச்சி, மீன் என்பவற்றை பயன்படுத்தி சுவை நிறைந்த போசாக்கு மிக்க உணவுகளை தாய்மார் சமைத்து தங்களுடைய சிறுவர்களுக்கு கொடுக்கலாம். இதன்மூலம் அதிகளவு போசாக்கு நிறைந்த உணவுகளை பெறுவதுடன் சிறுவர்களின் உடல்நிறை அதிகரித்தலை தடுத்து சுறுசுறுப்பான சிறார்களாக மாற்றும்.

குடும்பத்திலுள்ளவர்கள் இணைந்து உணவு உண்ணுதல்.

குடும்பத்திலுள்ளவர்கள் அனைவரும் சிறுவர்களுடன் இணைந்து உணவு உண்ணும் போது சிறுவர்களுக்கும் உணவு உண்பதற்கான ஆர்வம் தூண்டப்படும். சிறுவர்கள் உணவை தெரிவு செய்து உண்பார்கள். குடும்ப உறவினர்களுடன் இணைந்து உண்ணும் போது சிறுவர்கள் போதியளவு உணவை உண்பதற்கான வாய்ப்பு அதிகம். எனவே இயன்றளவில் குடும்ப உறவினர்களுடன் அனைவரும் இணைந்து உணவு உண்ண வேண்டும்.

Family smiling around a healthy meal

எனவே பெற்றோர்களே சிறுவர்களுக்கு பொருத்தமான சூழலை உருவாக்கி அவர்களை சுகாதாரமான ஆரோக்கியமானபிரஜையாக உருவாக்க வேண்டும். சிறுவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுத்து ஆற்றல் மிகு சமுதாயத்தை உருவாக்குவோம்.

 “ இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள்”

Rate this Article 1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (2 votes, average: 4.50 out of 5)

Loading...

Translate »