தாய்ப்பாலூட்டலின் மகத்துவம்

இன்றைய சுருங்கி வருகின்ற உலகில் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களின் எண்ணிக்கையும் சுருங்கிவருகிவருகின்றது. நாகரீகம் நாகரீகமென பெண்கள் தம்மையே கெடுத்துக் கொள்ளகின்றனர். தாய்ப்பாலானது மானிடப்பெண்ணின் மார்பகத்திலிருந்து குழந்தை பிறந்து ஓரிரு மணித்தியாலத்திற்குள் சுரக்கப்படும் திரவத்தன்மையான போசாக்கான உணவாகும். தாய்ப்பாலானது குழந்தைக்கு தேவையான அனைத்து போசணை கூறுகளை உள்ளடக்கியதுடன் சிசுவின் வளர்சிக்கும் ஆரோக்கித்துக்கும் மிகவும் இன்றியமையாத்தாக அமைகிறது. பொதுவாக மானிடப் பெண்ணின் மார்பகமானது குழந்தை பிறந்து ஒரு சில மணி நேரத்தினுள் பாலினை சுரக்க தொடங்குகிறது. குழந்தை ஒன்றிற்கு கட்டாயமாக முதல் ஆறுமாத காலங்களிற்கு தாப்பால் மட்டுமே பிரதான உணவாக வழங்கப்பட  வேண்டும். நீர் அல்லது வேறு திரவங்களோ ( உ+ ம்- பசுப்பால், formula milk) கொடுத்தலாகாது. ஏனெனில் தாய்ப்பாலானது குழந்தையின் உடல் உள வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் கொண்டதாக அமைகிறது. இக்காலப்பகுதியில் தாய்பாலுக்கு ஈடான ஆகாரம் வேறு எதுவுமில்லை ஏனெனில் தாய்ப்பாலை வேறு எந்த பால் உற்பத்திப் பொருட்களாலும் ஈடுசெய்ய முடியாது என்பதுடன் தாய்பாலிலுள்ள சில முக்கிய கூறுகள்( உ+ ம்- இமியுனோகுளோபின், Immunoglobin A, பிறபொருள் எதிரி) வேறு எந்த பால் உற்பத்தி பொருளிலும் இல்லை.

தாய்பாலின் உற்பத்தி மற்றும் வெளியேற்றலானது தாய் மற்றும் சேயின் தன்மைக்கேற்ப மாறுபடும். அதாவது தாயின் வயது, உடல் நிலை, உணவுப்பழக்க வழக்கங்கள், நோய்நிலைமை மற்றும் சேயின் உறிஞ்சும் தன்மை, உணவுத் தேவைப்பாடு (பசி) நோய்நிலைமை என்வற்றோடு பால் கொடுக்கும் விதம் ∕முறை, நேரம் அரவணைப்பு என்பவற்றிலும் தங்கியுள்ளது. பிறந்த குழந்தையானது உணவினை உறிஞ்சி எடுக்கும் தன்மையை மட்டுமே கொண்டிருக்கும். எனவே சிசுவானது திரவ உணவையே உட்கொள்ளும் உடலமைப்பு வசதியினை கொண்டிருக்கும். தாய்ப் பாலானது திரவத்தன்மையில் இருப்பதுடன் தாயின் மார்பகமானது குழந்தை வாயினை வைத்து உறிஞ்சும் அமைப்பில் காணப்படுவதாலும் குழந்தை இலகுவில் தாய்ப்பாலினூடாக  ஊட்டச்சத்தினை பெற்றுக் கொள்ள கூடியதாக இருக்கிறது. பிறப்பின் போது நாவின் வளர்ச்சி மட்டுப்படுத்தப்பட்டது, சிசுவின் நாக்கு கடினமான உணவினால் காயத்திற்குள்ளாக்கப்பட கூடியது.

பொதுவாக தாய்ப்பாலானது பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஊட்டப்படுகிறது, எனினும் எயிட்ஸ் (AIDS) ,காசம் போன்ற நோயுள்ள தாய்மார்கள் தாய்ப்பாலினை ஊட்டாமல் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனெனில் தாய்ப்பாலுடனூடாக முக்கியமான அத்தியவசியமான போசணைக் கூறுகள் மட்டுமன்றி சில தீமைபயக்கும் நோயாக்கிகள் (HI VIRUS), மற்றும் பதார்த்தங்களும் (Alcohol, Caffeine) கடத்தப்படுகின்றன.

தாய்ப்பாலில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் உடல் சேமிப்பு கலங்களிலிருந்து குருதி சுற்றோட்ட தொகுதி மூலம் பெறப்பட்டு மார்பக சிற்றறையில் (breast alveoli) பாலாக மாற்றப்பட்டு சேமிக்கப்படும். தாய்ப்பாலானது மாப்பொருள் (பிரதானமாக லக்ரோசு), கொழுப்பு, புரதம், நீர், உயிர்ச்சத்து [ உயிர்ச்சத்து (vitamin) A, B1, B2மற்றம் C ], கனிப்பொருள் லக்ரோபெரின் (Lactoferrin ), இமியுனோகுளோபின் A   (Immunoglobulin A), கேசின் (Casein) ,கல்சியம், சோடியம் என்பற்றோடு சில தீமை பயக்கும் பதார்த்தங்களும் பாலூட்டல் செயன்முறையினூடாக சிசுவிற்கு கடத்தப்படுகின்றது.

சிசுவின் சமிபாட்டு தொகுதியின் தொழிற்பாடு பூரணமடைய 6 மாதங்கள் ஆகிறது. இக்காலப்பகுதியில் தாய்ப்பாலே சிறந்த உணவாகும். ஏனெனில், இது சிறந்த போசணை கூறுகளை வழங்குகிறது. குழந்தையின் ஆரம்பகால வளர்ச்சிக்கு அவசியமான கூறுகள் பொதுவாக தாய்ப்பாலின் மூலமே கிடைக்கிறது. ஒரு குழந்தை முழுமையான உடல் உள வளர்ச்சியினையும் ஆரோக்கியத்தையும் பிறப்பின் பின்னாலான காலப்பகுதியிலே அடைகிறது. பொதுவாக மூளை வளர்ச்சியடைய இருவருடங்கள் ஆகிறது.

பிரசவத்தினை தொடர்ந்து தாயின் மார்பகத்தில் சுரக்கப்படும் பால் சீம்பால் (Clostrum) எனப்படும். இது குழந்தைகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய முதல் சிறந்த உணவாகும். சிறிதளவே சுரக்கப்படுமாயினும் அதிகளவு Immunoglobulin A, Lactoferin, vitamin A சோடியத்தை கொண்டுள்ளது. குழந்தை பிறந்தபின் சுற்றுப்புறச் சூழலானது தாயின் கருவறையிலிருந்து முற்றிலும் வேறுபடுகின்றது. தாய்ப்பாலிலுள்ள புரதம் அதாவது Immunoglobulin A குழந்தைக்கு உயிர்ப்பற்ற நிர்ப்பீடன தொகுதியை வழங்குகிறது. இவ் நிர்ப்பீடன தொகுதியானது குழந்தையை சுற்றுப்புறச் சூழல் நிலைமைகள் தொற்று கிருமிகள் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கின்றது. தாய்ப்பாலிலுள்ள லக்ரோபெரின் (Lactoferrin ) போன்ற பதார்த்தங்கள் குடலை பாதிக்கும் பற்றீரியா (bacteria) களின் வளர்ச்சியை தடுப்பதால் குழந்தையின் சமிபாட்டுத் தொகுதியின் செயற்பாட்டை சீராக பேணுகிறது. அத்துடன் இரும்பு (Iron) அகத்துறிஞ்சலை அதிகரிக்கவும் கடத்தவும் உதவுகிறது. தாய்ப்பாலினலுள்ள கொழுப்பம்லங்கள் (Olieic acid, Palmitic acid, ௰3 and ௰6, கொழுப்பமிலம்) மூளை மற்றும் நரம்பு கலங்களின் வளர்ச்சி ஆரம்பகால மனவிருத்திக்கு மிகவும் இன்றியமையாத்து. அத்துடன் கொழுப்பில் கரையும் நுண் போசணை கூறுகளை (அதாவது A, D, E, K) கடத்த உதவுகிறது.

தாய்பாலிலுள்ள லக்ரோஸ்(Lactose) குழந்தைக்கு தேவையான சக்தியை (Energy) வழங்குகிறது. தாய்ப்பாலானது நுண்ணிய சில அத்தியவசியமான கூறுகளின் அதாவது பிறபொருள் எதிரிகள், வளர்ச்சி காரணிகள், சமிபாட்டு நொதியம், ஓமோன்கள் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும் பதார்த்தம் பாலூட்டல் மூலம் குழந்தைக்கு வழங்கப்படுகிறது

பசுப்பால் மற்றும் formula milk ன் அமைப்புக்கள் மற்றும் கூறுகள் தாய்ப்பாலிருந்து வேறுபடுவதோடு தாய்ப்பாலிலுள்ள கூறுகள் ஏனைய பாலில் இல்லை ( உ+ ம்- Immunoglobulin A) ஏனைய பாலில் இல்லை, லக்ரோபெரின் மற்றும் லைசோசைம் ஆனது மிகவும் சிறிதளவிலையே காணப்படுகிறது. எனவே தாய்ப்பாலிலுள்ள கூறுகள் குழந்தையின் அறிவாற்றலையும் அதிகரிக்க செய்வதோடு குழந்தையை ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்க உதவுகிறது. தாய்பாலை எடுக்காத ∕குறைந்தளவு தாய்ப்பாலை உட்கொள்ளும் குழந்தையுடன் ஒப்பிடும் போது முழுமையாக தாய்ப்பாலை உட்கொள்ளும் குழந்தைக்கு பிற்காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய், உயர்குருதி அமுக்கம், உடற்பருமன் அதிகரிப்பு சிறுநீரக தொகுதி நோய்கள், சுவாச பிரச்சனை நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

தாய்ப்பாலூட்டலினால் குழந்தைக்க் ஒவ்வாமை ஏற்படுவது குறைக்கப்படுகிறது. அதேவேளை தாய்க்கும் பல நன்மை பயக்கின்றது. அதாவது பாலூட்டல் செயன்முறையானது இயற்கைப் பிறப்பு கட்டுப்பாட்டின் மூலம் குழந்தைகளுக்கிடையிலான இடைவெளியை பேணுகிறது. தாய்க்கும் சேய்க்கும் இடையிலான பிணைப்பை அதிகரிக்க செய்கிறது. பிரசவத்தின் பின் கருப்பையை சுருங்கச் செய்வதுடன் இரத்த வெளியேற்றத்தை குறைக்கிறது. உடற்பாகங்களில் பிரதானமாக மார்பகம், கருப்பை போன்றவற்றில் கட்டிகள் (Cancer) ஏற்படுவதை தடுக்கிறது. அத்துடன் தாயின் உடல் நிறையை பேண உதவுகிறது.

தாய்ப்பாலானது இலவசமாக கிடைக்கின்ற நூறு வீதம் தூய்மையான குழந்தைக்கு கொடுக்கப்பட வேண்டிய சிறந்த ஆகாரமாகும். எனவே தாய்ப்பாலூட்ட முடியாத சந்தர்ப்பம் (தாயின் நோய் நிலமை) தவிர்ந்த ஏனைய அனைத்து சந்தர்ப்பத்திலும் பொருத்தமான விதத்தில் பொருத்தமான நேரத்தில் குழந்தையின் தேவைக்கேற்ப வழங்கப்பட வேண்டும்.

Translate »