வேக உணவுகளும் அதன் விளைவுகளும்

அதிகமான முதலீடு

பாஸ்ட்-புட்  எனப்படும் வேக உணவுக் கலாச்சாரம் நகரப்பகுதிகளில் கிட்டத்தட்ட 70 சதவீதம் ஆக்கிரமித்துவிட்டது.சிறு நகரங்களில் கூட இன்றைக்கு  பாஸ்ட்-புட்  வியாபாரம் வெற்றிநடை போட்டு இயங்கி  வருவகிறது. சுவைமிகுந்த உணவாக  இருந்தபோதிலும், பாஸ்ட்-புட் ஆனது பல்வேறுபட்ட  நோய்களுக்கு  காரணமாகும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இவ்வாறான  உணவுகளை  உண்பதினால் பல்வேறு  நோய்களுக்கு முகங்கொடுக்க நேரிடும். இளம் தலைமுறையினர்  தொடர்ந்து  பாஸ்ட்-புட்   உண்பதினால்  50 வயதை  அடையும் போது   புற்றுநோய் போன்ற  அபாயகரமான நோய்களுக்குள்ளாக வேண்டி  ஏற்படும்  என ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது . குழந்தைகளுக்கும்  இரண்டாம்  தர – நீரிழிவு  நோய்  வருவதற்கும்  இவ்வேக உணவுகளே வித்திடுகின்றன.பெண்களுக்கு  ஏற்படும்   என்புருக்கி  நோய் , குருதிச்சோகை  என பல்வேறுபட்ட  தொல்லைகளுக்கும்  இவ்வேக உணவே காரணமாகும்.2007 ம்  ஆண்டு பிரிட்டனில் நடந்த  கணக்கெடுப்பொன்றில்  பாஸ்ட்-புட்  கலாச்சாரத்தினால்  75 சதவீதமான  மக்கள்  பல்வேறுபட்ட  நோய்களுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் பல்வேறு நாடுகளில் குழந்தைகளிடம்  நடாத்தப்பட்ட  60 இற்கும் மேற்ப்பட்ட   மருத்துவ ஆராய்ச்சி  முடிவுகளிலும்  இதய நோய் மற்றும்  புற்றுநோய்  இளவயதிலேயே  தாக்குவதட்கு வாய்ப்பு இருப்பதாக  உணவியல் மற்றும்  உணவு அறிவியல் கழகம்   தெரிவித்துள்ளது.

துரித உணவு என்றால் என்ன ?

புரதம், விற்றமின் ,கனியுப்புக்கள் மிகக்குறைந்த அளவு அல்லது அறவே இல்லாத மிகுந்த உப்பும், கொழுப்பும் கொண்ட உணவுகள் துரித உணவுகள் என தேசிய சத்துணவுக் கழகம் வரையறுத்துள்ளது.

துரித உணவு அறிமுகம் ஏன் ?

உலகம் முழுவதும் உள்ள மக்களின் குறிப்பாக நமது உணவுப்பழக்கத்தை மாற்றி அமைத்து மேலை நாடுகளின் பண்பாட்டு துரித உணவுக் கம்பனிகள் துரித உணவு வகைகளை அறிமுகப்படுத்தி நம் மக்களை அடிமைகளாக மாற்றி வருகின்றன.இதன் மூலம் ஒவ்வொரு பகுதியிலும் உற்பத்தி செய்யப்பட்ட தனிச்சுவையுடன் கூடிய உணவுவகைகள் அழிக்கப்பட்டு ஒரே மாதிரியான உணவு வகைகள் மக்கள் மீது திணிக்கப்படுகின்றன. இந்த துரித உணவுகளில் சுவைத்தான் அதிகமாக இருக்குமே தவிர உடல் நலத்திற்குத் தேவையான சத்துக்கள் இருப்பதில்லை.இவற்றில் சேர்க்கப்படும் இரசாயனப் பொருள்களினால் உடல்நலத்திற்குத் தீமையே விளையும்.

அதிகமான முதலீடு

உலக சுகாதார நிறுவனம் தொற்று நோய்கள் அல்லாத நோய்கள் பரவுவதற்கு முக்கிய காரணமாக உணவுப்பழக்கம்,உடற்பயிற்சியின்மையுமே என்று கூறி அதற்குத் தகுந்தாற் போன்று உணவு முறையையும் உடற்பயிற்சியினையும் முன்வைக்கிறது.

உலகம் முழுவதும் துரித உணவு பரவி வருகிறது.இத்தகைய துரித உணவு உற்பத்தியில் அதிக அளவு முதலீடு செய்வதற்கே உலக நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன.1988 லிருந்து 1997 வரை ஆசிய நாடுகளில் இத்தகைய உணவுத் தயாரிப்பில் போடப்பட்ட அமெரிக்க மூலதனம் 743 மில்லியன் டொலர்களிலிருந்து 21 பில்லியன் டொலர் வரை அதிகரித்திருக்கிறது.அதே போல லத்தின் அமெரிக்காவில் இடப்பட்ட அமெரிக்க மூலதனம் 222 மில்லியன் டொலர்களிலிருந்து 33 பில்லியன் டொலர் வரை அதிகரிக்கிறது.இது விவசாயத்தில் அமெரிக்கா இடும் மூலதனத்தை விட அதிகமாகும்.ஆக இவற்றிலிருந்து ஒரு விடயம் தெளிவாகிறது,உலக அளவில் உணவு உற்பத்தி சத்தற்ற ஊளைச்சதையர்களை உருவாக்குவதாக அமைந்துள்ளது. மக்கள் உண்மையான சத்தைப் பெற ஏகாதிபத்திய நாடுகளும் நிறுவனங்களும் விரும்பவில்லை என்பது தெளிவு.

ஆரோக்கியமான உணவு வகைகளான காய்கறிகள், பழங்கள் உண்பது இளைய தலைமுறையினரிடம் குறைந்து வருவதாக நிபுணர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர். நாட்டின் எதிர்காலத் தூண்கள் சுறுசுறுப்பற்றவர்களாகவும் ஊளைச்சதையர்களாகவும் மாறிவருகின்றனர்.

மேற்கத்திய  ஏகாதிபத்திய நாடுகள் ஒருபுறம், பட்டினியால் பரிதவிக்கும் நோய்ஞ்சான்களாகவும்  இன்னொருபுறம்  வேண்டாத  ஊளைச்சதையுடனும்  அளவற்ற  நீரிழிவு  நோய் போன்ற தோற்றுநோய் அல்லாத  நோய்களுடன் மக்களை  உருவாக்குகின்றன.இச்சதியை  நாம் எப்போது புரிந்து கொண்டு விடுபட போகிறோம்.

துரித உணவுப்பின்னணி

உலகமயமாக்கல் கொள்கைகள் பெற்றெடுத்த குழந்தையே துரித உணவு.உலகம் முழுவதும் தேசம் கடந்த தொழிற்கழகங்களும், பண்பாட்டு கம்பெனிகளும் துரித உணவுத் தயாரிப்பில் ஈடுபட்டுவருகின்றன. பெரும் இலாபம் கிடைப்பதனால் மக்களின் உடல்நலத்தைப் பற்றி அக்கறை காட்டுவது இல்லை. இவர்களின் நோக்கம் மிகச்சுவையான உணவைத் தயாரித்து இலாபம் ஈட்டுவதேயாகும்.

துரித உணவில் கலக்கப்படும் இரசாயனப் பொருட்கள்

இதனால் அதிகமாக அடிக்கடி உணவு உண்ண வேண்டும் என்ற உணர்வும் தூண்டப்படும். இதனால் பலர் அடிக்கடி மற்றும் அளவில்லாமல் இந்த உணவுகளை உட்கொள்கின்றனர்.இதுமட்டுமல்லாமல் கோதுமையில் தவிடு நீக்கப்பட்டு சில இரசாயனப் பொருட்களை சேர்த்து வெண்மையாக்கப்படும் மைதாவைக் கொண்டு தயாரிக்கப்படும் பரோட்டா, நூடுல்ஸ் , பன் ,சமோசா ,பர்கர் போன்றவற்றில் நார்ச்சத்து என்பது இருக்காது.

மேலும் துரித உணவில் சேர்க்கப்படும் சாயம் , அஜினமோற்றோ போன்ற வேதி பொருட்கள் நமது குடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

ஏற்படும் தீமைகள்

1. துரித உணவுகள் சாப்பிடுவதாலும்,உடற்பயிற்சி செய்யாததினாலும் நீரிழிவு நோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் அலட்சியம் காட்டினால் உடலின் ஏனைய உறுப்புகளும் பாதிப்படையும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
2. ஞாபக் குறைவு , கவனக் குறைவு, திட்டமிட்டு செயற்படும் திறன் இன்மை எனப் பல பிரச்சினைகள் ஏற்படும்.

3.தலைவலி, மனச்சோர்வு , உடற்ச்சோர்வு , உடல் எடை அதிகரிப்பு,உணவுக்கு ஏங்குதல் போன்ற வியாதிகளும் ஏற்படும்.

4.உணர்ச்சிகள் கட்டுக்குள் இல்லாமை ,வயிற்றுவலி , மூட்டுவலி , நாக்கு வீங்குதல் ஏற்படுவதுடன் நரம்புக் கலங்களும் மிகப் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றன.

5. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சிறுவயதிலேயே பருவமடைகின்றனர்.இதற்கு பல காரணங்கள் உண்டு.எனினும் நம்முடைய உணவுப்பழக்கமும் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஈஸ்ட்ரஜன் எனும் ஓமோனை சுரக்கச் செய்வதில் பதப்படுத்தப்பட்ட துரித உணவு காரணியாக அமைகிறது.

6.மேலும் , துரித உணவைச் சாப்பிடும் குழந்தைகளில் 60 சதவீதமானோர் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் உடற்பருமனால் பாதிக்கப்படுகின்றனர்.

வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியத்திற்கு துரித உணவு பெரும் ஆபத்து என்பது மறுப்பதற்கில்லை.

பரிந்துரைக்கும் விதிமுறைகள்

  • கடுமையான விதிமுறைகளை வகுத்து அதனை சட்டமாக்க வேண்டும் என் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பரிந்துரைக்கின்றனர்.
  • கல்வி நிறுவனங்களுக்குக்கருகில் துரித உணவுகளை விற்பனை செய்யக்கூடாது.
  • தொலைகாட்சி , சமூக வலைத்தளங்களில் துரித உணவுவகைகளுக்கான விளம்பரங்களை தடை செய்ய வேண்டும்.
  • துரித உணவு வகைகளின் கெடுதல் குறித்தும் பாரம்பரிய உணவு வகைகளின் நன்மை குறித்தும் பொது மக்களுக்கு விழிப்பூட்டலை ஏற்படுத்த வேண்டும்.
  • பாரம்பரிய உணவுகளுடன் சிறுவர் விளையாட்டு சாதனங்கள்,பொம்மைகள் ,காட்டூன் படங்கள் போன்றவற்றை இலவசமாக வழங்க வேண்டும்.
Translate »